பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் இவரா.? அமித் ஷா வெளியிட்ட அறிவிப்பு.!   - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது, பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக அமித் ஷா மட்டுமே தொடர்ந்து இருக்கிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பாரதிய ஜனதா விதிகள்படி தலைவரின் பதவிக்காலம் என்பது 3 ஆண்டுகள்.

மேலும், தொடர்ந்து 2 தடவை மட்டுமே தலைவராக இருக்க முடியும். இதை தொடர்ந்து கடந்த, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு அமித் ஷா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் அவருடைய பதவிக்காலம் முடிந்தது. இதற்கிடையே பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

பாரதிய ஜனதாவில் ஒரு நபர் 2 பதவிகளில் இருக்க முடியாது. ஆனால், அமித் ஷா பாரதிய ஜனதா தலைவர், மத்திய மந்திரி என 2 பதவிகளில் நீடித்து வருகிறார்.

அமித்ஷாவுக்காக கட்சி விதிகள் மாற்றி அமைக்கப்படலாம். இதன் மூலம் அவர் 2 பதவிகளில் இருப்பதுடன் தலைவர் பதவியில் மேலும் நீடிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், வரும் டிசம்பரில் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித்ஷா அறிவித்திருக்கிறார். வாராந்திர பத்திரிகை ஒன்றில் பேட்டி அளித்துள்ள அமித் ஷா இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி அமைப்பு தேர்தல்கள் முழுமையாக நடத்தப்பட்டு இறுதியில் டிசம்பரில் புதிய தலைவரை தேர்வு செய்வோம் என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

நீங்களே தொடர்ந்து கட்சியை பின்னால் இருந்து இயக்குவீர்களா? என்று கேட்ட கேள்விக்கு பாரதிய ஜனதா கட்சி என்பது காங்கிரஸ் கட்சி அல்ல. காங்கிரசில் யார்வேனாலும் கட்சியை பின்னால் இருந்து இயக்கலாம் என்ற நிலை இருக்கிறது.

ஆனால், பாரதிய ஜனதாவில் கட்சி செயல்பாடுகளுக்கு என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டு இருக்கிறது. அந்த விதிகள்படிதான் கட்சி செயல்படும். கட்சியை யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது என்று பேசினார்.

புதிய தலைவரை தேர்வு செய்ய இருப்பதால் தற்போதைய செயல் தலைவர் ஜே.பி. நட்டா புதிய தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new leader for bjp amit shah said


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->