அசாம் : வெளிநாட்டவர்களை அடைத்து வைக்கும் வகையில் புதிய தடுப்பு காவல் முகாம்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் உள்ள கோபால்பாரா உள்பட ஆறு இடங்களில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டவர்களை அடைத்து வைப்பதற்காக தடுப்பு மையங்கள் உள்ளன. இந்த தடுப்பு மையம் அங்குள்ள சிறை வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பாக, இந்த மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கோபால்பாரா மாவட்டத்தில் சுமார் 46 கோடி செலவில் 3,000 கைதிகளை தங்க வைக்கும் திறனுடன் பெரிய அளவில் தடுப்பு மையம் கட்டும் பணி தொடங்கபட்டது. 

இந்த கட்டிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த புதிய கட்டிடத்திற்கு சந்தேககத்திற்குரியவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என்று அடையாளம் காணப்பட்ட கைதிகளை மாற்றும் பணியை அசாம் மாநில அரசு முதல் முறையாக தொடங்கியுள்ளது. 

அதன் படி, முதற்கட்டமாக 45 ஆண்கள், 21 பெண்கள், ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 68 கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த கட்டிடத்திற்கு "இடமாற்ற முகாம்" என்று புதிய பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new Detention Camp building open in assam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->