திருமண விழாவில் நடனமாடிய இளைஞர் .! திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாக திருமண விழாவில் ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. அப்போது உறவினர்கள் மணமக்கள் என்று அனைவரும் நடனம் ஆடி விழாவை மிக சிறப்பாக கொண்டாடுவர். 

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள குடா ராம்சிங் என்ற கிராமத்தில் சகோதரியின் திருமண விழாவில் சலீம் பாய் ராநவாஸ் என்பவர் கலந்து கொண்டார். அத்துடன் மேடையில் நடனமாடியவர்களுடன் சேர்ந்து அவரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடினார். இதை சுற்றியிருந்தவர்கள் வீடியோ எடுத்து உள்ளனர். 

அப்போது, அவர் திடீரென கீழே மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு, அருகீலுள்ள, மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து வருகிறது.அதுவும் இந்த கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு 40 வயதுடையவர்கள் அதிகம் உயிரிழக்கின்றனர்.  

இதேபோன்று, சில மாதங்களுக்கு முன் மும்பையில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, கர்பா நடனம் ஆடி கொண்டிருக்கும் போது, மணீஷ் நராப்ஜி சோனிக்ரா என்ற 35 வயது நபர், மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார். இதையறிந்த அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா என்பவரும் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.  

கடந்த செப்டம்பர் மாதம் ஜம்முவில், பார்வதி வேடமிட்டு யோகேஷ் குப்தா என்ற கலைஞர் மேடையில் ஆடியபோது, நடனத்தின் ஒரு பகுதியாக தரையில் விழுந்து உள்ளார். அதன் பின்னர் அவர், பின்பு எழுந்து தொடர்ந்து ஆடவில்லை. இவ்வாறு தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத் தக்கது ஆகும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near rajasthan young man died in mariage function


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->