சமூக வலைத்தளங்களில் பரவும் விடுதி மாணவிகளின் வீடியோ- தற்கொலைக்கு முயலும் சக மாணவிகள்..! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் தனது சக தோழிகளின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளிவந்ததை தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. 

இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மாணவியை கைது செய்தனர். இந்த வீடியோ வெளிவந்த காரணத்தினால் பல மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக சமூக ஊடகப் பதிவு வெளியாகி இருப்பதை பல்கலைக்கழகமும் காவல்துறையும் மறுத்துள்ளன. 

அக்கல்லூரி மாணவி ஒருவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பஞ்சாப் மாநில மகளிர் ஆணையத் தலைவர் மனிஷா குலாட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பஞ்சாப் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் தெரிவித்ததாவது,  "இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க விட மாட்டோம் என்று அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கும் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் அமைதி காக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near punjap hostel students vedio publish on social media


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->