மும்பை || இரண்டுமாத குழந்தையை கடத்திய தம்பதி.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலைய பகுதியில்  தனியார் பள்ளிக்கூடம் அருகே பொதுக்கழிப்பறை ஒன்று உள்ளது. இந்த கழிப்பறையின் அருகே பெண் ஒருவர் மூன்று குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி இரவு வழக்கம் போல் அந்தப்பெண் நடைபாதையில் தனது மூன்று குழந்தைகளுடன் படுத்து உறங்கினர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில் அந்தப்பெண் கண்விழித்து பார்த்த போது தன்னுடன் படுத்து உறங்கிய தனது இரண்டு மாத குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அந்தப்பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். 

அந்த காட்சி பதிவில் ஒரு நபர் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றதை கண்டனர். இந்த சம்பவத்தில் போலீசார், குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து கடத்தி சென்ற நபரை பிடிப்பதற்கு விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், இரண்டு மாத குழந்தையை கடத்திச்சென்றது அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த முகமது ஹனிப் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் ஹனிப் வீட்டிற்கு சென்று கடத்தப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், முகமது ஹனிப்பை போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஹனிப்பின் மனைவி அப்ரின் என்பவருக்கும் தொடர்பு இருந்ததால் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் குழந்தையை விற்பதற்காக கடத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mumbai two month baby kidnappe accuest arrested


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->