கணவரின் இறுதி ஆசையாக 1 கோடியை காணிக்கையாக செலுத்திய பெண்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் புகழ்பெற்ற விட்டல் சாமி- ருக்மணி கோவில் உள்ளது. இங்கு வரும் ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு மும்பையை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் தாயுடன் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது அங்கு தான் மனைவியிடம் தான் இறந்த பிறகு கிடைக்கும் ஆயுள் காப்பீடு பணம் முழுவதையும் விட்டல் சாமி கோவிலில் காணிக்கையாக செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். 

அதன் படி, அவர் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்தார். அதன் பிறகு அந்த பக்தரின் குடும்பத்திற்கு காப்பீடு தொகையாக ரூ.1 கோடி கிடைத்தது. 

இதை வாங்கிய பக்தரின் மனைவி கணவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்காக காப்பீடு தொகையாக கிடைத்த ரூ.1 கோடியை முழுவதுமாக கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தினார். 

இது தொடர்பாக கோவில் நிர்வாகி பாலாஜி தெரிவித்ததாவது, "இந்த கோவிலில் இதுவரை யாரும் ரூ.1 கோடி அளவுக்கு காணிக்கை செலுத்தியது கிடையாது, இது இந்த கோவிலுக்கு கிடைத்த மிகப்பெரிய காணிக்கை" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra woman donate one crores to vittal swamy rukmani temple in pandharpur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->