பலாப்பழத்தில் மின்சாரம்..! ஆச்சரியத்தில் உறையவைத்த கேரளா மாணவிகள்.! - Seithipunal
Seithipunal


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் கேரளா மாநிலத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும், ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பலாப்பழங்கள் வீணாகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் கவலை அடைந்து வருகின்றனர். 

இந்நிலையில், கேரள மாநிலத்தில் மலையோர கிராமமான இடுக்கியை சேர்ந்த இரண்டு மாணவிகள் பலாப்பழத்தைக்கொண்டு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 

இந்த கண்காட்சியில் இடுக்கியை சேர்ந்த மாணவிகளான அக்சானா அலியார் மற்றும் மேரி ரோஸ் அபி இருவரும் பலாப்பழத்துடன் சென்று கலந்து கொண்டனர். அங்கு, அவர்கள் பலாப்பழத்தில் உள்ள மாவு சத்தை தனியாக பிரித்து அவற்றை கரிமமாக்கி பிளாஸ்டிக் உருவாக்கலாம் என்றுத் தெரிவித்தனர்.

அப்படி உருவாக்கப்பட்ட இந்த பிளாஸ்டிக்கை நீராவி விசையாழி மூலம் செலுத்துவதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று தெரிவித்து கண்காட்சியை ஆய்வு செய்ய வந்த நிபுணர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

இதற்கு முன்னதாக இந்த மாணவிகள் இருவரும் கேரள அரசு சார்பில் நடத்திய அறிவியல் கண்காட்சியிலும் இதே படைப்புக்காக பரிசு பெற்றனர். தற்போது தென்னிந்திய அறிவியல் கண்காட்சியிலும் இதனை காட்சி படுத்தபட்டுள்ளது. இதன் மூலம் இனி கேரளா மாநிலத்தில் பலாப்பழம் வீணாகாமல் தடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala two students attend south india science ehibition with jackfruit


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->