கர்நாடகா || குடிநீர்த்தொட்டியில் தண்ணீர் குடித்த தலித் பெண்.! மாட்டு சிறுநீர் ஊற்றி சுத்தம் செய்த சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹிக்ஹொட்ரா கிராமத்தில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வேறு கிராமத்தை சேர்ந்த பெண் வந்துள்ளார்.

அந்த பெண் கிராமத்தில் உள்ள லிங்காயத் பீடி என்ற தெருவில் உள்ள தண்ணீர் தொட்டியில் குடிநீர் அருந்தியுள்ளார். அந்த பெண் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தங்கள் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் அருந்தியதால், லிங்காயத் பீடி தெருவை சேர்ந்தவர்கள் குடிநீர் தொட்டியை மாட்டு சிறுநீர் கொண்டு சுத்தம் செய்துள்ளனர். 

இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka water tank clean cow urine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->