கர்நாடகா || கோவிலில் தலித் குடும்பத்தினரை விரட்டி அடித்த அர்ச்சகர்.! வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தின் நிட்டூர் கிராமத்தில் முளுகாட்டம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு குடும்பம் கோவிலுக்கு பூஜை செய்வதற்கு மாலை, தேங்காயுடன் சென்றனர். 

அப்போது கோவிலில் இருந்த அர்ச்சகர் அவர்களை உள்ளே வராமல் தடுத்து நிறுத்தி, கோயிலை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியதுடன், கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதையடுத்து, தலித் குடும்பத்தினர் ஏன் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கேள்வி எழுப்பிய போது, உங்களுக்கு எல்லாம் பூஜை செய்ய முடியாது என்றுக்கூறி, விரட்டி அடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு குறித்து கோயிலில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தும்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோயிலில் வழிபாடு செய்ய வந்த தலித் குடும்பத்தினரை வெளியே போக சொன்ன அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka priest drive away dalit family going to temple


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->