இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்தில் வேணூரை சேர்ந்த ராதகிருஷ்ணன் என்பவருக்கும் உடுப்பி மாவட்டம் கார்கலா பகுதியை சேர்ந்த ஒரு மைனர் பெண்ணுக்கும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. 

இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசும் அளவிற்கு மாறியது. இந்நிலையில், ராதகிருஷ்ணன் கடந்த 2019-ம் ஆண்டு, அந்த மைனர் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அப்போது, அங்கு யாரும் இல்லாததால், அந்த நேரத்தைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட  ராமகிருஷ்ணன், மைனர் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே யாரிடமாவது தெரிவித்தால், கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். 

இருப்பினும், அந்த பெண் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். 

அதன் பின்னர் போலீசார் அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக உடுப்பி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நீதிபதி சீனிவாச சுவர்ணா தலைமையில் நடைபெற்ற போது, "ராதாகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga young man arrested for sexual harassment case


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->