ஜி.எஸ்.டி வரி வசூலில் புதிய சாதனை.. பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் தேசிய சுரங்கம் மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருட்கள் அகாடமியை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது "வாழ்க்கையில் ஆட்சி மற்றும் நல்லாட்சிக்கு அடையாளமாக ராமபிரான் இருந்து வருகிறார் கடந்த 10 ஆண்டுகளில் வரி அமைப்பில் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம்.

முன்பு இருந்த வரி அமைப்பை சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களுக்கு போதிய வழிகாட்டுதல் இல்லாததால் நேர்மையாக வரி செலுத்துபவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஜிஎஸ்டி வடிவில் நவீன வரி அமைப்பை கொண்டு வந்தோம். வருமான வரி செலுத்துவதை அரசு சீர்படுத்தியது இதுபோன்ற சீர்திருத்தங்களால் நாட்டில் வரி வசூல் சாதனை படைத்துள்ளது. அரசு போதுமான வருவாய் பெறுவதில் மக்கள் பங்கு அதிகம் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi pride on tax collection new hike


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->