அசல் மேட் இன் இந்தியா.. அதிரடி சோதனையால் பதறும் பாகிஸ்தான், சீனா.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பாதுகாப்பிற்காக பல ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய நாக் (Nag Missile) ஏவுகணை உருவாக்கப்பட்டது. 

இந்த ஏவுகணை மூலமாக எதிரிகளின் பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாக மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்று வந்தது. 

தற்போது நாக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை நடைபெற்று வந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள பாலைவன பகுதியான பொக்ரான் பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இலக்கை மிகவும் துல்லியமாக நாக் ஏவுகணை தாக்கி அழித்துள்ளது. இதனையடுத்து நான் ஏவுகணை விரைவில் இந்திய இராணுவத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவுடன் எல்லை பிரச்சனை, பாகிஸ்தானுடன் எல்லை பிரச்சனை என இந்தியாவிற்கு அருகேயுள்ள அண்டை நாடுகள் பல தொல்லைகளை கொடுத்து வரும் நிலையில், நாக் ஏவுகணை சோதனை வெற்றி இருநாட்டு தலைமை மற்றும் இராணுவத்திடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nag Missile Testing in Rajasthan 22 October 2020 by DRDO


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->