மே 3-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா.? பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதும் இந்தியாவின் கொரோனா வைரஸ் பரவல் குறையவில்லை. 

இந்நிலையில் மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. ஆனால் கொரோனா வைரஸின் பாதிப்புகள் குறைந்ததால், மே மூன்றாம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க போவதாக சில மாநிலங்கள் தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சர் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பின் அவர் முதல் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். இந்த ஆலோசனையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mp modi meeting in all states cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->