கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : அதிரவைக்கும் பறக்கும் படையினர் - கோடி கோடியாக சிக்கும் அவலம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டசபைத் தேர்தல் : அதிரவைக்கும் பறக்கும் படையினர் - கோடி கோடியாக சிக்கும் அவலம்.!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சட்டசபைக்கு வருகிற 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபக்கம் இருப்பினும் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பணம் வழங்குவதைத் தடுத்து வருகின்றனர்.

சமீபத்தில், புத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமாரின் சகோதரரான சுப்பிரமணியராயின் வீட்டில் கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய்  பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தின் கிளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் சொகுசு பங்களா ஒன்றில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் படி அவர்கள் விரைந்து சென்று சோதனை செய்ததில் 4.5 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சொகுசு பங்களாவை ரமேஷ் யாதவ் என்ற நபர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்துள்ளார். அவரின் பின்னணி குறித்த விவரம் அறியப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money seized in karantaga for assembly election


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->