தமிழிசை பெயரில் பண மோசடி முயற்சி..!! உஷாரான போக்குவரத்து துறை அமைச்சர்..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் செல்போனுக்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் படத்துடன் கடந்த 30ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

புதுச்சேரியில் ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐஏஎஸ் அதிகாரி ஜகுவர் ஆகியோருக்கு இதுபோல் ஆளுநர் தமிழிசை பெயரில் தகவல் அனுப்பி பண மோசடி செய்ய முயன்ற சம்பவம் நடந்திருந்தது. இதனால் உஷாரான அமைச்சர் சந்தரபிரியங்கா ஆளுநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அதற்கு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மனோஜ் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அமைச்சருக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிய நபரை தேடி வருகின்றனர். ஆளுநர் தமிழிசை பெயரில் மோசடி குறித்தான குறுஞ்செய்தி தொடர்ந்து அனுப்பப்படும் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Money fraud attempt in the name of Governor Tamilisai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->