இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்த தீபம் ஏற்றுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி பண்டிகை. அராஜகம் செய்து வந்த நரகாசுரனை வதம் செய்து, அந்நாளை சிறப்பிக்கும் பொருட்டு தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த தினத்தை தமிழக மக்கள் வெகுவிமரிசையாக வீடுகளில் பட்டாசுகளை வாங்கி வைத்தும், இனிப்பு மற்றும் பலகாரங்கள் போன்றவை தயார் செய்தும் உறவினர்களுடன் இனிமையாக கொண்டாடுவார்கள். தீபாவளி பண்டிகைக்கு பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய பிரதமர் மோடி தீபாவளி தினத்தன்று இராணுவ வீரர்களுடன் கலந்து கொள்வது வழக்கமானது. 

அந்த வகையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மருக்கு சென்று இராணுவ வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் கொண்டாடி வருகிறார். இதன்போது பேசிய அவர், " எல்லையை காத்து நிற்கும் வீரர்களை பெருமைப்படுத்த மக்கள் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவ வீரர்களுக்கு நாட்டு மக்கள் சார்பில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி தினத்தன்று ராணுவ வீரர்களுக்கு எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Speech in Jai Salmar Army Base 14 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->