இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் 71-வது உலக அழகிப்போட்டி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் 71-வது உலக அழகிப்போட்டி.!!

இந்தியாவில் 'மிஸ் வேர்ல்ட் ' உலக அழகிப் போட்டி இறுதியாக 1996-ம் ஆண்டு நடைபெற்றது. இந்தப் போட்டி இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் நடைபெற்றது. இந்த போட்டியில், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஐரீன் ஸ்கிலிவா பட்டம் வென்றார். 

அதன்பிறகு இந்தியாவில் இந்த உலக அழகிப்போட்டி நடக்கவே இல்லை. இந்த நிலையில், இந்தியாவில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி தெரிவித்ததாவது, "71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டி சுமார் ஒரு மாதம் நடைபெறும். இதில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. ஆனால் தேதி முடிவாக வில்லை" என்றார். இந்தப் போட்டியில் தற்போதைய 'மிஸ் இந்தியா வேர்ல்ட்' அழகி சினி ஷெட்டி,  இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள உற்சாகத்துடன் காத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

miss world competition to be held in india after twenty seven years


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->