28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் நடைபெறும் உலக அழகி போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில், 71வது உலக அழகிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த உலக அழகி போட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு வளாகங்களில் பிப்ரவரி 18ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்தப் போட்டியைத் தொலைக்காட்சிகளில் நேரலையில் கண்டுகளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான, அறிவிப்பை உலக அழகிப் போட்டியின் தலைவர் ஜூலியா மோர்லி, மிஸ் வேர்ல்டு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில், 71வது உலக அழகிப் போட்டியை இந்தியா நடத்தவிருக்கிறது. இதனை மிகவும் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறிவிக்கிறோம். அழகு, பன்முகத்தன்மை மற்றும் தலைமையேற்றல் போன்ற கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன. 

ஒரு அற்புதமான பயணத்திற்கு தயாராகுங்கள்" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1996ம் ஆண்டு இந்தியாவில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

miss world competition in india after 28 years


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->