ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டால் பாகிஸ்தானுக்கு நல்லது.! மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைப்பது தான் அந்த நாட்டுக்கு நல்லது என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதை தொடர்ந்து, காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் எதிர்ப்பு எழுந்தது இதன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித்திருந்தது. மேலும், அங்கு கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டார்கள்.

அதுமட்டுமின்றி, வதந்தி பரவுவதை தடுப்பதற்காக அங்கு தொலைபேசி, செல்போன், இணையதள சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, காஷ்மீரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

காஷ்மீரில் தொடர்ந்து அமைதியான சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, அங்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவுகளையும், கட்டுப்பாடு களையும் மத்திய அரசு படிப் படியாக விலக்கி வருகிறது.

இந்த பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு இந்தியா தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சண்டிகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதன் மூலம் அந்த மாநிலம் தற்போது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக முழுமையாக இணைந்துள்ளது.

காஷ்மீரின் வளர்ச்சிக்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. காஷ்மீரில் வன்முறைகளை தூண்டும் செயலை பாகிஸ்தான் கைவிட வேண்டும்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவே பாகிஸ்தானுக்கு நல்லது. போர் வேண்டாம் என்றால், பாகிஸ்தான் நாட்டின் மீது அக்கறை இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் இம்ரான் கான் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister ramdas athawale to pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->