உத்தரகாண்ட் :போர் நினைவுச் சின்னம் - ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரில் இந்திய ராணுவத்தில் பணி புரிந்து நாட்டுக்காக உயிர் தியாகம் நீத்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,400 ராணுவ வீரர்களின் நினைவாக  போர் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நேற்று அந்த நினைவுச்சின்னத்தை திறக்கும் விழா நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டு நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
அங்கு அவர்கள் மூன்று பேரும் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். 

அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, "நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு மிகப் பெரியது அளவிட முடியாது. உங்களால் தான் நாங்கள் இன்று பெருமையுடன் நிற்க முடிகிறது. 

நாட்டிற்காக நீங்கள் செய்யும் தியாகங்களுக்கு நாங்கள் கொடுப்பது ஒரு கடுகு அளவு தான். போர் வீரர்களுக்கு இந்த முழு நாடும் நன்றிக்கடன் பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister rajnath singh open war memorial statue in uttarkant


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->