இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த நபர்.. நினைவு தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


மங்கள் பாண்டே:

இந்தியர்களின் எழுச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்த மற்றும் சிப்பாய் கலகம் தோன்ற காரணமானவருமான மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார். 

1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் 34வது ரெஜிமென்டில் படைவீரராக பணிபுரிந்த மங்கள் பாண்டே, சிப்பாய் கலகத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர்களுக்குகிடையே ஏற்பட்ட கலகம் காரணமாக மங்கள் பாண்டே கைது செய்யப்பட்டு 34வது படைப்பிரிவு கலைக்கப்பட்டது. பிறகு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு 1857ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

மங்கள் பாண்டேவின் வரலாற்றைச் சித்தரிக்கும் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. சுளைiபெ என்ற திரைப்படம் 2005ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்திய அரசு மங்கள் பாண்டே நினைவாக 1984ஆம் ஆண்டு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mangal pandey memorial 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->