ராமர் படம் உள்ள தட்டில் பிரியாணி - கையும் களவுமாக சிக்கிய கடை உரிமையாளர்.!
man arrested for briyani sales ramar picture plate in delhi
தலைநகர் டெல்லியில் உள்ள ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டலில் ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில், ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. அதன்பிறகு அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக காட்டப்படுகிறது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர்.
அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்ததுடன், காகித தட்டுகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for briyani sales ramar picture plate in delhi