#BREAKING: நாடாளுமன்ற பொது தேர்தலில் தனித்து போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு...!! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து களம் இறங்கியது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. 

திரிபுரா மாநில பொது தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 0.88% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் நோட்டா 1.36% வாக்குகள் பெற்றுள்ளது. 

அதே போன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வங்க மாநில அமைச்சர் சுப்ரஜா மறைந்ததை அடுத்து சாகர்திக்கி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலுக்கான முடிவும் இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் 86,667 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் 64,681 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 

இந்த நிலையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்கப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் "சாகர்திக்கி தோல்விக்கு யாரையும் குறை கூற போவதில்லை. 

சில நேரங்களில் ஜனநாயகத்தின் முன்னேற்றம் என்பது பாதகமாகவோ சாதகமாகவோ அமையலாம். ஆனால் இங்கு முறைகேடான கூட்டணி அமைந்துள்ளது. அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

பாஜக தங்கள் வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு மாற்றிவிட்டது. காவி கூடாரத்தின் உதவியை நாடிய காங்கிரஸ் இனி தன்னை பாஜக விரோதி என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும். 

2024 திரிணாமுல் காங்கிரஸ் தனித்து களமிறங்கி மக்கள் ஆதரவுடன் களத்தில் நாங்கள் போராடுவோம். பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee announces that she will contest Lok Sabha elections alone


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->