நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை.. பேச துணிந்தால் சிறை கம்பிகள் தான்.. மல்லிகார்ஜுனா கார்கே குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலம் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அந்த பொதுக்கூட்டம் மேடையில் பேசிய அவர் "இந்தியாவின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி சுதந்திரத்திற்காக போராடியது காங்கிரஸ் கட்சி தான். நாடாளுமன்றத்திலோ, பொதுவெளியிலோ பேச்சு சுதந்திரம் என்பது இல்லை.

மீறி பேச துணிந்தவர்கள் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் தள்ளப்படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு பணம் வீக்கத்தை தடுக்கும் வாக்குறுதியுடன் பாஜக ஆட்சிக்கு வந்தது.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும், வறுமையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனை காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று பாஜக அரசின் மக்கள் விரோத போக்கையும், கொள்கைகளையும் தெரியப்படுத்த வேண்டும்'' என பொதுக்கூட்ட மேடையில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna kharge accused no freedom of speech in India


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->