அடுத்த ஆண்டு முதல் நீட் நுழைவுத் தேர்வில் அதிரடி மாற்றம்; மத்திய கல்வித்துறை ஆலோசனை..! - Seithipunal
Seithipunal


நீட் வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து, நீட் தேர்வு முறை தொடர்பான சீர்திருத்தங்கள் மீது மத்திய சுகாதார அமைச்சகம் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வை கணினி வாயிலாக நடத்தப்போவதாக கல்வித் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வை பல அமர்வுகள் மற்றும் கட்டங்களாக நடத்துவது, தேர்வுக்கான முயற்சி எண்ணிக்கைக்கு மற்றும் வயது வரம்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது போன்ற பிற பரிந்துரைகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதற்கு உயர்நிலைக் குழுவின் இந்தப் பரிந்துரைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் ஓர் இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, அடுத்த ஆண்டில் இருந்து நீட் நுழைவுத் தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுவதுடன், வேறு பல முக்கிய மாற்றங்களும் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

2026 நீட் யூஜி வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் முன்பு தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர். முன்னதாக 2024-இல் நிகழ்ந்த வினாத்தாள் கசிவுக்குப் பிறகு டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமர்த்தப்பட்டது. இதன் சார்பில் தேர்வை மேம்படுத்துவதற்கு அக்குழு சுகாதார அமைச்சகத்திடம் மூன்று முக்கியப் பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

அதனை என்டிஏவின் அதிகாரிகள் ஆஜரான நிலைக்குழுவின் முன்பு பகிர்ந்துகொண்டனர். அந்தப் பரிந்துரைகளில், பேனா மற்றும் காகித முறையை விடுத்து கணினி வாயிலாகத் தேர்வை நடத்தக் கூறியிருந்தனர்.

இவற்றுடன், தேர்வை பல அமர்வுகள் மற்றும் கட்டங்களாக நடத்துவதும், தேர்வுக்கான முயற்சி எண்ணிக்கைக்கு மற்றும் வயது வரம்புக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது ஆகிய மூன்று அம்சங்களும் குறிப்பிட்டிருந்தனர்.

இதில் வயது வரப்பு குறித்த பரிந்துரை மட்டும் தற்போது சுகாதார அமைச்சகத்தின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக சுகாதார அமைச்சகத்திடம் ஒரு புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என்டிஏ, நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்தத் தேர்வுக்கான தரநிலைகளைத் தீர்மானிப்பது மத்திய சுகாதார அமைச்சகம். சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தும் தரநிலைகளுக்கு உட்பட்டு நீட் தேர்வை நடத்துவர் என்டிஏவின் பணியாகும்.

இந்நிலையில், அடுத்த ஆண்டிலில் இருந்து கணினி வாயிலாக நடத்தப்படும் என்று அறிவிப்பதற்கு முன்னதாக, சுகாதார அமைச்சகத்துடன் பலமுறை கல்வி அமைச்சகம் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தது. எனினும், அப்போது எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து என்டிஏ அதிகாரிகள் வட்டாரத் தகவல்களின்படி, நீட் தேர்வுக்குச் சுகாதார அமைச்சகம் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பையும், முயற்சி எண்ணிக்கைக்கு உச்ச வரம்பையும் நிர்ணயிக்கத் திட்டமிடுகிறதாகவும், இது சாத்தியமானால், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 22 முதல் 23 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இந்த நீட் தேர்வுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முயற்சிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் ஏராளமான விண்ணப்பதாரர்கள் ஐந்து முறைக்கு மேல் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

நீட் தேர்வு எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது 17. ஆனால், அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. இதன் விளைவாக, 50-60 வயதுடையவர்கள் கூட தொடர்ந்து விண்ணப்பிக்கின்றனர்.

நீட் நுழைவுத் தேர்வுடன் சேர்த்து ஜேஇஇ மெயின்ஸ் தேர்வை நடத்தவும் ஒரு நீண்டகாலப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இதையும் நாடாளுமன்றக் குழுவின் முன் எடுத்துரைத்துள்ள என்டிஏ, இது குறித்தும் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

தற்போதைய சூழலில் இந்த இரு தேர்வுகளையும் இணைப்பது சற்றுக் கடினமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில், நீட் அல்லது ஜேஇஇ மெயின் தேர்வுகளை எழுதும் மாணவர்கள், தங்களது 12-ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய இரண்டையும் பயில்வதால் சிக்கல் எழும் எனும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Major Changes to NEET Entrance Exam Starting Next Year


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->