மகாராஷ்டிரத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் பாஜக?.. மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தின் மேல் சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பர்பானியில் இருக்கும் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்த தலைவர் மற்றும் மத்திய மந்திரி ராவ் சாகேப் தன்வே பிரச்சாரம் செய்தார். 

இதன்போது பேசிய அவர், மகாராஷ்டிரா மாநிலங்களில் வரும் 2 முதல் 3 மாதங்களில் பாஜக ஆட்சியை அமைக்கும் என்று பரபரப்பாக பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், " பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மகாராஷ்டிரத்தில் மீண்டும் நமது ஆட்சி அமையாது என நினைக்க வேண்டாம். 

வரும் 2 முதல் 3 மாதங்களில் மீண்டும் நாம் ஆட்சியை அமைப்போம். இதற்கான பணிகளை நாங்கள் துவக்கியுள்ளோம். இப்போது நடக்கும் மேல் சபை தேர்தலுக்காக காத்திருக்கிறோம். இந்த மேல் சபை தேர்தல் நடைபெற்று முடிந்ததும் நமது ஆட்சி அமையும் " என்று பேசினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரையில் பாஜக அதிகபட்சமாக 105 இடங்களை வைத்துள்ள நிலையில், சிவசேனா 56 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களும், காங்கிரஸ் 44 இடங்களும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Govt Under Taken by BJP Shortly Said by Central Minister Raosaheb Danve


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->