அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் போலி மருந்துகளை தயாரித்து அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்து மோசடி செய்வதை மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது. 

மகாராஷ்டிரா, நாக்பூர் அரசு மருத்துவமனையில் 21 ஆயிரம் போலி ஆன்டிபயாட்டிக் சிப்ரோ ஃப்ளோக்சசின்  மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இது போன்ற வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் சிறையில் உள்ளதாகவும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு ஒப்பந்த முறையில் மருந்து வாங்கப்பட்டதாகவும் அதன் மூலம் மோசடி குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது, கடந்த மார்ச் மாதம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மாதிரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதில் எந்த மருந்தும் போலியானது இல்லை என கடந்த டிசம்பர் மாதம் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சோதனை செய்யப்பட்ட மருந்துகளை பறிமுதல் செய்து அதன் நிறுவனம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. 

பிறகு மருந்து தயாரித்த நிறுவனம் போலியானது எனவும் அப்படி ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra government hospitals fake medicines


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->