காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஸ்பெஷல் டீ.. எங்கு தெரியுமா? வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு இளைஞர் ஒருவர் 5 ரூபாய்க்கு டீ விற்று வருகிறார்.

மத்தியபிரதேசம் மாநிலம் ராஜ்கர் பகுதியை சேர்ந்த அந்தார் குர்ஜார் என்ற இளைஞர் கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தனது உறவினர் திருமணத்தில் பெண் ஒருவரை பார்த்து பழகியுள்ளார்.

இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் திடீரென  அந்தப் பெண் ஒருநாள் தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் நம்மால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் பிரேக் அப் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான இளைஞர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளார் ஆனால் அவரது நண்பர்கள் அவருக்கு அறிவுரை கூறி மனம் மாற வைத்துள்ளனர். இந்த நிலையில் கெத்தாக தனது காதலியின் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்து தற்போது கில்ஜிபூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.

மேலும் அந்த கடைக்கு அவரது காதலியின் பெயரின் முதல் எழுத்தான M என்பதை சேர்த்து 'M Bewafa Chaiwala' என்று பெயர் வைத்துள்ளார். அதற்கு காரணம் காதலிக்கும் போது அவருடைய காதலி ஏதாவது கடை வைத்தால் அதற்கு தனது பெயரை வைக்கும்படி கேட்டுக் கொண்டதால் அவரது பெயரை வைத்துள்ளார்.

மேலும், இந்த கடையில் காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களுக்கு 5 ரூபாய்க்கு ஸ்பெஷலாக டீ வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love failure boys special tea in madhya pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->