"மோடி என்றால் ஊழல் என்று மாற்ற வேண்டும்" - விஸ்வரூபம் எடுத்த குஷ்புவின் பழைய ட்வீட்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து அவருக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனால், மத்திய அரசு அவரை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் மற்ற அரசியல் கட்சியினரும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கடந்த 2018ம் ஆண்டில் மோடிக்கு எதிராக பதிவிட்ட டுவீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், "மோடி என்றால் ஊழல் என்று மாற்ற வேண்டும். மோடி எல்லா இடங்களிலும் இருக்கிறார். ஆனால் இது என்ன? மோடியின் குடும்பப்பெயர் ஊழலுடன் இணைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குஷ்பு, "காங்கிரஸ் கட்சி என்னுடைய பழைய ட்வீட்டைத் தொடுத்து தற்போது பரப்புவது அவர்கள் எவ்வளவு அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது வெளியிடப்பட்ட 'மோடி' ட்வீட் குறித்து நான் வெட்கப்படவில்லை. அப்போது நான் அக்கட்சித் தலைவரைப் பின்தொடர்ந்து கட்சியின் மொழியை மட்டுமே பேசினேன்" என்று விளக்கமளித்தார் 

இதை கேட்ட காங்கிரஸ் ஆதரவாளர்கள் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்த குஜராத் அமைச்சர் பூர்ணேஷ் மோடி, குஷ்பு சுந்தர் மீதும் வழக்குப் பதிவு செய்வாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Khushbu sundars against modi old tweet viral in social medias


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->