மினி லம்போகினி தயாரித்த அனாஸ் பேபி.. வாழ்க்கை சோதித்த போதும், கனவை நனவாக்கிய இளைஞர்.! - Seithipunal
Seithipunal


கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் பிரித்திவிராஜ், கோட்டையம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சிரில் பிளிப் விலையுயர்ந்த லம்போகினி காரை வைத்துள்ளனர். இந்த கார் சுமார் ரூ.3.5 கோடி இருக்கும் என்ற நிலையில், இடுக்கி மாவட்டம் சேனாபதி குலகொழிச்சல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அனாஸ் பேபி. 

இவர் சிறுவயது முதலாகவே கார்கள் என்றால் மிகவும் பிரியமாக இருந்த வந்துள்ளார். இது மட்டுமல்லாது புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட அனாஸ் பேபி, பத்தாம் வகுப்பு படிக்கும்போது சைக்கிள் ஒன்றை மோட்டார் சைக்கிளாக மாற்றி அனைவரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், பாலக்காட்டில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ படித்தவர் பேபி, மங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது சொந்த தயாரிப்பு மூலமாக லம்போகினி கார் தயாரிக்க வேண்டும் என்பதற்காக, அந்த பணியையும் விட்டுவிட்டு ஊருக்கு வந்துள்ளார். 

கடந்த 2014 ஆம் வருடத்தில் ஏற்பட்ட கேரள பெரு வெள்ளத்தின் போது, அனாஸ் பேபியின் வீடு முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில், அவரது தந்தையும் இறந்து போயிருந்தார். இதனால் குடும்பத்தைச் சுமக்கும் பாரம் அனாசின் மீது திரும்பவே, அவருக்கு லம்போகினி கனவிலிருந்து விடைகொடுக்கவும் மனமில்லை. 

இதனையடுத்து கிடைத்த வேலைகளையும் செய்து குடும்பத்தை பார்த்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி லம்போகினி காரை தயார் செய்ய துவங்கியுள்ளார். பல மாநிலங்களில் காருக்கான உதிரி பாகங்களை வாங்கி, தற்போது தனக்கான லம்போகினி காரை உருவாக்கியுள்ளார். இந்த கார் அசலான லம்போகினி போல ஒத்துபோயுள்ள நிலையில், இதனை தயாரிக்க ரூ.2 இலட்சம் செலவு ஆகியதாகவும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Youngster Anas Baby Make Mini Lamborghini Car Himself


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->