இன்று மாலை வானில் தென்பட இருக்கும் அதிசயம்..? சபரிமலையில் நடக்கவிருக்கும் விசேஷ பூஜை - இலட்சக்கணக்கில் குவியும் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கேரளா சபரிமலையில் இன்று மாலை மகரஜோதி தெரிய உள்ளது. இதையொட்டி, கேரள மாநில காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சபரிமலையில் இன்று பொன்னம்பலமேட்டில் மாலை 6 மணிக்கு மகரஜோதி தெரியும். இதனை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். அந்த வகையில், ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் மகரவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

கேரள பஞ்சாக வழக்கத்தின் படி, சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நாளை மகர சங்கராந்தி கொண்டாடுகின்றனர்.

இந்த நாளில், கேரள மாநிலம் பொன்னம்பல மேட்டில், சுவாமி அய்யப்பன் ஜோதி ரூபமாக காட்சி தருவதாக ஐதீகம்.

இந்த தரிசத்தை காண, ஆண்டு தோறும், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், மாலை அணிந்து, விரதம் இருந்து, சமரிமலைக்கு வருகின்றனர்.

இன்று மாலை 6.35 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜையை தொடர்ந்து, கருடன் வானத்தில் வட்டமிடும், அப்போது, வானத்தில் ஜோதி போல ஒளிரும் நட்சத்திரம் தென்படும்.

அதன் பின், சற்று நேரத்தில், பொன்னம்பல மேட்டில், மகர ஜோதி தென்படும். சிறிது நேரம் மட்டுமே காண முடிகின்ற இந்த அதிசய நிகழ்வை  காண பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டுள்ளனர்.

இந்த பூஜையையொட்டி ஐயப்ப பக்தர்கள் சுமார் 18 லட்சம் பேர் சபரிமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்காக 6000 அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பலத்த பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala-sabarimala-temple-all-set-for-makaravilakku-festival


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->