"மாம்பழம்" திருடியதால் வேலையை இழந்த எஸ்.ஐ..!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டக்காயம் பகுதியை சேர்ந்த ஷிகாப் என்பவர் இடுக்கி மாவட்ட ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி கோட்டயம் அரசு மருத்துவமனையின் இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்பொழுது பரதோடு என்ற இடத்தை கடக்கும் பொழுது வந்த மாம்பழ வாசனையால் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர் அங்குள்ள பழக்கடையில் இருந்து சுமார் 10 கிலோ மாம்பழங்களை திருடி சென்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ஆயுதப்படை எஸ்ஐ ஷிகாப் பழங்களை திருடியது தெரியவந்தது.

மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மாம்பழங்களை திருடிய குற்றத்திற்காக எஸ்ஐ ஷிகாப்பை இடுக்கி மாவட்ட எஸ்பி பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட பல வியாபாரி புகாரை வாபஸ் பெற்றதால் அண்மையில் ஷிகாப் மீண்டும் பணிக்கு சேர்ந்தார். 

இந்த நிலையில் குற்றவாளிக்குகளில் சிக்கிய காவல்துறையினரை பணிநீக்கம் செய்யுமாறு கேரளா அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. 

அந்த வகையில் மாம்பழம் திருடி காவல் துறையினருக்கு அவமானம் ஏற்படுத்திய எஸ்ஐ ஷிகாப்பை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala police SI lost his job after stealing mangoes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->