கேரளா || கொட்டித் தீர்த்த கனமழை.! ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், அந்த நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், அங்கு போக்குவரத்து பாதித்தது. 

கேரளா மாநிலத்தில் அடுத்த மாதம் 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் உள்ள கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும், இன்று முதல் அடுத்த மாதம் 2 தேதி வரை மாநிலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, கனமழை மற்றும் இடியுடன் கூடிய  மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில வருவாய்த்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala northeast rain yello alart


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->