கேரளாவில் ஜூன் 9 வரை முழு ஊரடங்கு.. மலப்புரத்தில் மும்மடங்கு ஊரடங்கு வாபஸ் - கேரள அரசு.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,513 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 28,100 பேர் கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். 

198 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 2,33,034 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீட்டுதனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,456 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,41,759 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அதில் 23,513 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், " மலப்புரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட மும்மடங்கு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு ஜூன் மாதம் 9 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Govt Extend Lockdown till 9 June 2021 and Malappuram Triple Lockdown Withdrawn 29 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->