பரபரப்பு: தமிழக - கேரள எல்லையில் டன் கணக்கில் வெடிபொருட்கள் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


காய்கறி லோடு ஏற்றி வந்த லாரியில், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வெடிபொருட்கள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலத்தில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு, கேரளாவிற்கு ஒரு லாரி சென்ற நிலையில், அதில் வெடிபொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பேரில், தமிழக - கேரள எல்லையில் கேரள காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது, சேலத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரியை சோதனை செய்ததில், அந்த லாரியில் பெட்டி பெட்டியாக 50,000 ஜெலட்டின் குச்சிகள் உட்பட வெடிமருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெட்டி பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதில் சிக்கியுள்ள ஓட்டுனர் மற்றும் கிளினீர் பணியாட்கள் மட்டுமே என்பதால், லாரியின் உரிமையாளர் மற்றும் பொருட்கள் ஏற்றி வர முன்பதிவு செய்திருந்த கேரளாவை சார்ந்தவர் யார்? என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala - Tamilnadu Border Salem Lorry Seized by Police Smuggling of Gelatin sticks and explosives


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->