அரசு பேருந்தில் பிரசவ வலி.. பேருந்திலேயே மருத்துவமனைக்கு சென்றும் குழந்தை பிறந்து இறந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


அரசுப்பேருந்தில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், பேருந்தை நேரடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பெண்ணை பிரசவத்திற்காக அனுமதி செய்த நிலையில், குழந்தை துரதிஷ்டவசமாக உயிரிழந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டம் சிந்தகி நகரில் இருந்து விஜயபுராவுக்கு அரசு பேருந்து வந்துகொண்டு இருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக ராஜ்குமாரும், நடத்துனராக அருண் நாயக் என்பவரும் பணியில் இருந்துள்ளனர். பேருந்தில் கர்ப்பிணி பெண் உட்பட பல பயணிகள் பயணம் செய்துள்ளனர். 

இந்த பேருந்து விஜயபுரா அருகேயுள்ள தேவஹிப்பரகி பகுதியில் சென்றுகொண்டு இருக்கையில், கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பேருந்தில் வலியால் துடித்த நிலையில், பயணிகள் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. 

கர்ப்பிணியின் உறவினர்கள் யாரும் அவருடன் வரவில்லை என்பதை உணர்ந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், அவசர ஊர்தியை எதிர்பார்க்காமல் பேருந்தை விரைந்து மருத்துவமனையை நோக்கி இயக்கியுள்ளார்.  

பேருந்தில் இருந்த பயணிகளை வழியில் இறக்கிவிட்டு, மாற்று பேருந்தில் நொடிகளில் அனுப்பி வைத்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பேருந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பெண்மணியை சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

மருத்துவமனையில் பெண்மணிக்கு பிரசவ சிகிச்சையை தொடங்கிய நிலையில், அவரின் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இறந்துள்ளது. பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை உயிரிழந்தது சோகம் என்றாலும், சரியான நேரத்தில் அவர் மருத்துவமனைக்கு வரவில்லை என்றால் அவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பிரசவ வலியால் துடிதுடித்த பெண்ணை அரசு பேருந்திலேயே விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதி செய்த பேருந்தின் ஓட்டுநர் ராஜ் குமார் மற்றும் நடத்துனர் அருண் நாயக் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Vijayapura Woman Delivery Pain Traveling KSRTC Govt Bus Driver Went Hospital but Baby Died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->