கர்நாடகா ஹிஜாப் தடை || நீதிமன்றத்திற்கு எதிரான மனுக்கள்..! இந்தவாரம் தீர்ப்பு வெளியாகும்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடையின் மீது ஹிஜாப் அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. 

அந்த நிர்வாகத்தின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதே கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். 

இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது. 

ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் இன்றியமையாத நடைமுறை அல்ல என்று தெரிவித்த உயர்நீதிமன்றம், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. 

இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, இஸ்லாமிய மத மாணவிகள், இஸ்லாமிய மத அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தன. இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமந்த் குப்தா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

இதுகுறித்து, கர்நாடக அரசு மற்றும் மனுதாரர்களிடம் பல கட்ட விசாரணையை நீதிமன்றம் நடத்தியது. பத்து நாட்களில் அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் கடந்த 22-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் இந்த வாரம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதிகளில் ஒருவரான ஹிமந்த் குப்தா வரும் 16-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால், ஹிஜாப் தடை வழக்கில் இந்த வார இறுதிக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka hijap case this week result announce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->