அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மீண்டும் கடுமையாக போகும் ஊரடங்கு.? சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக திடீரென அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடகத்திலும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து கர்நாடகத்தின் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. 

குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், கொரோனா பாதிப்பில்லை என்ற பரிசோதனை அறிக்கையை வைத்திருப்பவர்கள் எந்த பிரச்சினையுமின்றி கர்நாடகாவிற்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநில எல்லையில் உள்ள பெலகாவி, மங்களூரு, யாதகிரி, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, அந்த மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கேரளா, மகாராஷ்டிரா மாநில இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கவும், எக்காரணத்தைக் கொண்டும் கொரோனா பரிசோதனை நடத்தாமல் அந்த மாநிலத்தில் இருந்து வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விதிமுறைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 24 மணி நேரமும் மாவட்ட எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிக்கும்படியும், காராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களவை இருந்து வருபவர்கள் தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு கர்நாடக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataka govt new order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->