50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,755 கோடி நிதி உதவி.. முதல்வர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனியில் பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகளும்  கலந்து கொண்ட நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஹாப்காம்ஸ் (HOPCOMS) கடைகளின் மூலமாக தக்காளி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர், கோப்பில், பல்லாரி மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையின் காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 

சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலத்தில் 50.77 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.3,755 கோடி நிதிஉதவி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வரும் நடப்பாண்டான (2020 - 2021) வருடத்தில் 47.81 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.956 கோடி வழங்கப்பட்டுள்ளதும் என்றும், கர்நாடக அரசுடைய கிசான் சமமான திட்டத்தின் கீழ் 44.67 இலட்சம் விவசாயிக்கு ரூ.893 கோடி நிதிஉதவி வழங்கப்படுத்தாகவும், சாகுபடி செய்துள்ள மக்காசோளத்தை கொள்முதல் செய்ய கர்நாடக பால் கூட்டமைப்பிற்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka cm announce relief fund for former


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->