காதலுக்கு முன்னரே கள்ளக்காதல் பழக்கம்.. கணவனின் துரோகத்தால், இளம்பெண்ணின் விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு பகுதியை சார்ந்தவர் சந்திரயா. இவரது மகள் ரஞ்சிதா (வயது 23). அங்குள்ள கடூர் அக்ரெஹள்ளி பகுதியை சார்ந்தவர் அருண் குமார் (வயது 30). இவர் சிக்மகளூரு நகரத்தில் உள்ள மெஸ்காம் நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே, இருவரும் தூரத்து உறவினர்கள் என்பதால் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

தற்போது இவர்களுக்கு 2 வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னர் அருண்குமார் அக்ரெஹள்ளி பகுதியில் சொந்தமாக வீடு காட்டியுள்ளார். இந்த வீட்டில் தம்பதிகள் தங்களின் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், திருமணத்திற்கு முன்னதாக அருண்குமாருக்கும், அக்ரெஹள்ளி பகுதியை சார்ந்த பெண்மணிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். உல்லாச காட்சிகளை அருண்குமார் விடியோவாக பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ காட்சிகளை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ரஞ்சிதா பார்த்து கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனையடுத்து தம்பதிகளுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படவே, ரஞ்சிதாவை அவரின் பெற்றோர் இல்லத்திற்கு செல்ல கூடாது என அருண் குமார் கூறியுள்ளார்.

இதனால் ரஞ்சிதா மனமுடைந்து காணப்படவே, சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பசவஹள்ளி காவல் துறையினர், ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொள்ளையில், அருண் குமார் விசாரணைக்கு பயந்து மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இவரை மீட்டு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்த நிலையில், முறையற்ற பழக்கம் குடும்பத்தை எப்படியெல்லாம் சீரழிக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Chikmagalur girl suicide due to husband illegal affair


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal