விபத்தில் காலை இழந்த பெண்.! இழப்பீடு வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரியா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சாலையை கடப்பதற்கு முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் சுப்ரியாவின் ஒரு கால் துண்டானது. 

இதைத்தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் செயற்கை கால் உதவியுடன் நடந்து வருகிறார். இந்நிலையில், இந்த விபத்து குறித்த வழக்கு ஹரிஹராவில் உள்ள மோட்டார் விபத்து இழப்பீடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அப்போது, சுப்ரியாவுக்கு ரூ.7.24 லட்சம் இழப்பீடு வழங்க கோரி காரின் உரிமையாளருக்கு கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காரின் உரிமையாளர் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்தார். 

அந்த மனு மீது பல்வேறு கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது வாழ வேண்டிய வயதில் காலை இழந்து செயற்கை கால் உதவியுடன் சுப்ரியா நடந்து வருவதாக தெரிவித்த நீதிபதி சந்தேஷ், சுப்ரியாவுக்கு ரூ.27.97 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataga highcourt order to compensation for woman leg loss at accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->