தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவர் பதவிக்கு: நீதிபதி சந்திரசூட் நியமனம்! - Seithipunal
Seithipunal


தேசிய சட்ட ஆணையத்தின் செயல் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக நீதிபதி சந்திரசூட்டின் பெயரை  பரிந்துரைத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக இருந்தார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சமீபத்தில் பொறுப்பேற்றார்.

இதனை தொடர்ந்து, தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராக உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி சந்திரசூட், நியமிக்கப்படுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justice Chandrachud appointed Acting Chairman of National Legal Services Commission


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->