அன்றைய தலைமுறை கண்ட கட்சி.. இன்றைய தலைமுறை காணாத காட்சி.. வியப்பை ஏற்படுத்திய காரோனாவின் தாக்கம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரம், இமாச்சல பிரதேசத்தின் எல்லைக்கு அருகேயே இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இருந்து சுமார் 213 கிமீ தொலைவில் இமயமலையுடைய தவுளத்தார் மலைத்தொடரானது அமைந்துள்ளது. 

பனிகளால் சூழப்பட்ட இந்த மலைத்தொடரின் ரம்மியமான காட்சியினை, ஜலந்தர் பகுதியில் வசித்து வரும் இன்றைய தலைமுறையினர் கண்டு இருக்க மாட்டார்கள். அங்கு இருக்கும் காற்று மாசு காரணமாக அம்மலையே மறைந்து இருந்துள்ளது. இந்த மலையானது சுமார் 25 வருடத்திற்கு பின்னர் தற்போது கண்களில் தெரிவித்தாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

கரோனா வைரஸை தடுக்க இந்தியா முழுவதிலும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், வாகன போக்குவரத்து என்பது முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் காற்று மாசானது பலமடங்கு குறைந்து இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, ஜலந்தர் பகுதியில் காற்று மாசு குறைந்து, தவுளத்தார் மலைத்தொடருடைய அழகிய தோற்றம் வெளிப்பட்டுள்ளது. 

இந்த விஷயத்தை தனது இளம் வயதில் கண்ட இப்போதைய வயோதினரும், இதனை காணாத இளம் தலைமுறையும் தங்களின் அலைபேசியில் செல்பி எடுத்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். கரோனா மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தாலும், இயற்கைக்கு பெரும் உதவி செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jalandhar city view of himalayas after 25 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->