நாளை விண்ணில் பாய்கிறது... "பி.எஸ்.எல்.வி. சி-55" ராக்கெட்..! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இருந்து சிங்கப்பூரின் இரண்டு செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்டை நாளை பகல் 2.19 மணி அளவில் விண்ணில் செலுத்துகிறது. 

இதில் இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்எஸ்ஐஎல்) ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூரின் லுமிலைட்-4 எனப்படும் 16 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளையும், 741 கிலோ எடையுள்ள டெலியோஸ்-02 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளையும் கிழக்கு நோக்கி குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் செலுத்தப்படுகிறது. இந்த சோதனைக்கு பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பிஎஸ்-4 நான்காவது நிலை பயன்படுத்தப்படும்.

இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிட கவுண்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12.49 மணிக்கு தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO Tomorrow launch PSLV C55 rocket


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->