இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம்.! ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் திறந்து வைத்தார்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-எஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக கடந்த 18-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவி சாதனை படைத்தது.

இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான 'அக்னிகுல் காஸ்மோஸ்', ஐ.ஐ.டி. மெட்ராஸ் மூலம் இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளத்தை உருவாக்க தொடங்கியது. 

இதையடுத்து ஏவுதள பணி தற்போது நிறைவடைந்த நிலையில், தனியார் ஏவுதளத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார். மேலும் இது பற்றி இஸ்ரோ தலைவர் தெரிவித்ததாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களை விண்வெளி நிறுவனம் வரவேற்கிறது.

தனியார் ஏவுகணை வாகனத்திற்கான முதல் பிரத்யேக ஏவுதளம் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வந்துள்ளது. இப்போது இந்தியா மேலும் ஒரு விண்வெளி தளத்தில் இருந்து விண்வெளிக்கு பயணிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO chief inaugurated India first private rocket launch pad at Sriharikota


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->