நிபந்தனைகளுடன் மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக 85 நாட்களுக்குப் பிறகு இணையதள சேவை நிபந்தனைகளுடன் மீண்டும் வழங்கப்படுவதாக மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இணையதள சேவை தொடங்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதாகவும், அதன் அடிப்படையில் நிறுவனங்கள் மற்றும் வீட்டில் இருந்து பணிபுரிய மக்கள், வழக்கறிஞர்கள், சுகாதாரம், எரிபொருள், மின்சாரம் போன்ற துறைகளுக்கு இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வியும் பாதிக்கப்படுவதால் நிபந்தனைகளுடன் மீண்டும் 85 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. மொபைல் போனில் இணையதள சேவை பயன்படுத்துவோருக்கு தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கில் இணையதள சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இணையதள சேவை பயன்படுத்த 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வி.பி.என் செயலியின் மூலம் இணையதள சேவையை பயன்படுத்த முடியாது. மணிப்பூர் வன்முறை தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள், போலிச்செய்திகள் முழுமையாக கண்காணிக்கப்படும்.

மக்கள் பயன்படுத்தும் இணையதள சேவையில் மூலம் மக்கள் தேடும் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு, அதன் தகவலும் தரவுகளும் சேகரிக்க அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது" என மணிப்பூர் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Internet service again in Manipur with conditions


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->