தேர்தல் நேரத்தில் இந்தியா எதிர்கொள்ளப்போகும் மாபெரும் சிக்கல்..? உளவுத்துறையிடமிருந்து பறந்து வந்த எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரிய அளவில் தீவிரவாத  தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக மதிய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும், வரும் 11ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக, மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மொத்தமுள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கும் வருகின்ற ஏப்ரல்  11 ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 6ஆம் தேதி வரை, 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில், தமிழகத்திற்கும், புதுவைக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம்  தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீரில் நீடித்து வரும் பதற்றத்தின் காரணமாகவும், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளாலும், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை சீர்குலைக்கும் வகையில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில், பெரிய அளவில் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Intelligence-warns-that-extremists-will-attack-during-the-election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->