பீகார் சிறையில் பரபரப்பு.! அதிகாரிகளுக்கு பயந்து செல்போனை விழுங்கிய கைதி.! - Seithipunal
Seithipunal


பிகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டச் சிறையில் கைஷார் அலி என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென கடுமையான வலிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

இதைப்பார்த்த சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு கோபால்கஞ்ச் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் வயிற்றில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அந்த எக்ஸரேவில் கைதியின் நெஞ்சு பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. இதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

அதன்பின்னர் மருத்துவர்கள் கைதியை மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமல் எண்டோஸ்கோபிக் உதவியுடன் மருத்துவர்கள் செல்போன்னை வயிற்றில் இருந்து அகற்றினர். 

இதையடுத்து சம்பவம் தொடர்பாக கைதியிடம் சிறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், சிறையில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அதிகாரிகளுக்குப் பயந்து செல்போனை விழுங்கியதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

inmate swallowed cellphone for fear officers in bihar jail


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->