முதல் இலகு ரக போர் விமானம் - இந்தியா அசத்தல்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உருவாக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் இன்று இந்திய போர் விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்த இலகு ரக போர் விமானத்தை சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிகல்ஸ் லிமிட்டேட்  தயாரித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் நடைபெற்ற விமானப்படை நிகழ்ச்சியில், இந்த ஹெலிகாப்டர் போர் விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று இந்த விமானத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்த விமானம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்பதால் ஜோத்பூரில், பாதுகாப்புத்துறை அமைச்சர். ராஜ்நாத் சிங் மற்றும் தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர் சௌதாரி ஆகியோர் முன்னிலையில் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. 

இதற்கு முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டரை விமானப்படையில் சேர்ப்பதன் மூலம், விமானப்படையின் பலம் அதிகரிக்கும்" என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த முதல் இலகுரக போர் ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்களாவன: 

*  5.8 டன் எடை கொண்ட இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு வான்வெளி தாக்குதல்களை தடுக்கும் வகையிலும், எதிரிகளின் தாக்குதல்களை தாங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிழே விழுந்தாலும் மிகக்குறைவான அளவில் மட்டுமே சேதம் ஏற்படும் வகையில் இதில் லேண்டிங் கியர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

* இந்த இலக்கு ரக போர் விமானம் முற்றிலும் இந்தியாவிலேயே ஹெச்.ஏ.எல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணி, மீட்புப்பணி, டேங்கர்கள் அழிப்பு, தரைப்படை தாக்குதல் என்று பல முக்கிய பணிகளை செய்யும் திறன் உடையது. மணிக்கு 268 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indias first Light fighter aircraft


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->