தனியார் மயமாகும் இரயில்வே துறை.! முதற்கட்ட பணிகளை அதிரடியாக துவங்கிய மத்திய அரசு.! பேரதிர்ச்சியில் ஊழியர்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள அரசு துறையில் மிகப்பெரிய துறையாக இந்திய இரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள இரயில்வே துறைக்கு சொந்தமான சுமார் 66 ஆயிரம் கிமீ இருப்புப்பாதையை அமைத்து., அனைத்து தூரத்திலும் சுமார் 31 விழுக்காடு அளவிற்கான தூரத்தை இரட்டை இரயில் பாதைகளாக மாற்றி அமைத்துள்ளது. 

இந்த வருடத்தில் வெளியான நிதிநிலைகள் அனைத்தும் அதிகளவு வருவாயை ஈட்டி தந்தது. இந்த நிலையில்., தனியார் நிறுவனங்களை வைத்து இரயில்வே துறையை இயக்குவது குறித்து பேச்சுவார்த்தையை நடத்தி வந்த நிலையில்., சில வழித்தடத்தில் மட்டும் விரைவு இரயில்களை தனியார் நிறுவனங்கள் இயக்க மத்திய அரசானது முடிவு செய்தது. 

இதன் பணிகளை துவக்கிய மத்திய அரசானது முதற்கட்டமாக இரண்டு விரைவு இரயில்களை தனியார் இயக்கவும்., குறைந்த தூரத்தில் இயக்கி சோதனையை செய்ய முடிவு செய்யப்பட்டு., தனியார் நிறுவனத்திற்கு சுமார் 100 நாட்கள் ஒப்பந்தப்புள்ளியை கோரியது. இதனை கேட்கும் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த புளியை அனுப்பவும் தகவல் விடப்பட்டது. 

தற்போது நடைமுறையில் உள்ள சிலிண்டருக்கு மானியம் போன்று., பயணசீட்டிற்கும் மானியம் வழங்க முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள முறைப்படி மூத்த குடி மக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில்., இதனால் இரயில்வே துறைக்கு வருடத்திற்கு ரூ.ஆயிரத்து முன்னூறு கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே இரயில்வே துறையின் தனியார் மயமாக்குவதற்கு ஊழியர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்த நிலையில்., மத்திய அரசானது முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ள காரணத்தால் ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian railway announce two express train handled short distance for 100 days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->